தபால் ஓட்டு கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்

தபால் ஓட்டு கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்
X

ராணிப்பேட்டையில் தபால் ஓட்டு கேட்டு அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தபால் ஓட்டு கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2கட்டங்களாக நடந்து வருகிறது. தேர்தல் முதற்கட்டமாக திமிரி,வாலாஜா,ஆற்காடு ஆகிய ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராமங்களில் 6தேதி நடந்து முடிந்துள்ளது. . தேர்தலில் அங்கன்வாடி ,சத்துணவு பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர்.

அவர்களுக்கு தபால் வாக்கினை ஜனநாயக முறைப்படி செலுத்து வதற்கான ஏற்பாடுகள் செய்து தரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்

எனவே , விடுபட்டு இருக்கும் தங்களது தபால் வாக்குகளை முறையாக செலுத்துவதற்கான ஏற்பாட்டை மாவட்ட தேர்தல் நிர்வாகம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்து உள்ளனர்.

இருபபினும், எந்தவித நடவடிக்கைகளும் செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள்,திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இசசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!