ஆற்காட்டில் லாரியில் ரேஷன்அரிசி கடத்தல்: 5 டன் அரிசி பறிமுதல்

ஆற்காட்டில் லாரியில் ரேஷன்அரிசி கடத்தல்: 5 டன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கடத்திய லாரி மற்றும் ஓட்டுநர் 

ஆற்காடு தாசாப்பேட்டையில் போலீஸார் வாகன சோதனையின்போது லாரியில் கடத்தப்பட்ட 5 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன். போலீஸ் எல்லைக்குட்பட்ட மாசாப்பேட்டை பாரதிநகர் ஜங்சனில இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின்பேரில் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் சுமார் 5 டன் ரேஷன் அரிசி பதுக்கி இருந்தது தெரியவந்தது. மேலும் போலீஸாரைக் கண்டு லாரியில் வந்த நபர் தப்பியோடிவிட்டார். .

உடனே ,போலீஸார் லாரியைப் பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில் லாரி டிரைவர் வேலூர் மாவட்டம் மாதனூரை சேர்ந்த ஆனந்தன் என்பதும் தப்பியோடியவர் ஆற்காட்டைச் சேர்ந்த பழனி என்பதும் தெரியவந்தது. பின்னர் மேல்விசாரணைக்காக வேலூர் அலகு 1 குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!