ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு
தமிழகத்தி்ல் அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளில் மது விற்க தடை விதித்ததையொட்டி அனைத்து கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது .
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரியருகே உள்ள தென் நந்தியாலத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவற்றை நேற்றிரவு மர்ம நபர்கள் ஓட்டை போட்டு கடையிலிருந்த மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவறிந்த இரத்தினகிரி போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயரதிகாரிகளுக்கு தெரிவித்தைத் தொடர்ந்து புதியதாக பொறுப்பேற்ற ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா அங்கு வந்து கடையை ஓட்டையிட்ட பகுதி மற்றும் சுற்றியுள்ளவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் போலீஸார் அளித்த தகவலின் பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முருகன் வந்து பார்வையிட்டார். பின்னர் சரக்கு விபரம் குறித்து மற்றும் கடை மேற்பார்வையாளர் ஸ்ரீதர்,விற்பனையாளர் சார்லஸ் ஆகியோர் கடையில் வைக்கப்பட்டு இருந்ததில் களவு போன மதுபாட்டில்கள் அவற்றின் மதிப்பு குறித்து கணக்கு எடுக்கப்பட்டதில் ரூபாய் 1,லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து கடை சூப்ரவைசர் ஸ்ரீதர் ,ரத்தினகிரி போலீஸில் கொடுத்தப் புகாரின் பேரில் போலீஸார் ழக்கு பதிந்து கொள்ளையர்ரகளைத் தேடி வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu