/* */

எருதுவிடும் போட்டி, திரளான காளைகள் பங்கேற்பு

எருதுவிடும் போட்டி, திரளான காளைகள் பங்கேற்பு
X

ராணிப்பேட்டை,மாங்குப்பம் பகுதியில் எருதுவிடும் போட்டி நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த மாங்குப்பம் பகுதியில் தைத் திருநாளை முன்னிட்டு எருது விடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏ., காந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக போட்டியில் பங்கேற்கும் எருதுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வர்ணம் பூசி ஜோடனை செய்து மேள தாளங்களுடன் அழைத்து வரப்பட்டன. பின்னர் எருதுகளை எந்தவிதத்திலும் துன்புறுத்தக் கூடாது என உறுதிமொழி ஏற்றனர்.

அதன் பிறகு வாடிவாசல் திறக்கப்பட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக போட்டியில் களம் இறக்கப்பட்டது. இதில் அதிக வேகம் ஓடிய மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த எருது விடும் போட்டியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மேலும் எருது விழாவை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jan 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!