அரக்கோணத்தில் பட்டபகலில் 6பேர் கொண்ட கும்பல் இளைஞரை வெட்டிக் கொன்றது

அரக்கோணத்தில் பட்டபகலில் 6பேர் கொண்ட கும்பல் இளைஞரை வெட்டிக் கொன்றது
X

அரக்கோணத்தில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட கார்த்திக்

அரக்கோணத்தில் பட்ட பகலில் 6பேர் கொண்ட கும்பல் இளைஞரை வெட்டிக் கொன்றது. நண்பனைக் கொன்றதற்கு பழிக்குப்பழியா? போலீஸார் விசாரணை

அரக்கோணம் பூக்கார தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன், திருமணமாகாதவர். கடந்த ஆண்டு அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் அதே ஊரைச்சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். அக்கொலை வழக்கில் கார்த்திக்கை போலீஸார் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தனர். இந்நிலையில் கார்த்திக் கடந்த 2நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்தார். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட கோகுலின் நண்பர்கள் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க காத்திருந்ததாக கூறப்படுகிறது .

இந்நிலையில் கார்த்திக் அரக்கோணத்திலுள்ள கோலோச்சியம்மன் கோயில் அருகே உள்ள அவரது நண்பரது வீட்டு மாடியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென மாடிக்கு வந்து கார்த்திக்கை சராமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. கொலையைக் கண்ட அதிர்ச்சியில் அருகிலிருந்தவர்கள் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த அரக்கோணம்டிஎஸ்பி மற்றும் போலீஸார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த கார்த்திக்கின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

மேலும் கொலைசம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீஸார் விசாரித்ததில், கடந்த ஆண்டில் கார்த்திக்கால் கொல்லப்பட்ட கோகுலின் நண்பர்கள், பழிக்குப்பழி வாங்கவே அச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று சந்தேகித்து மெய்வாகனன் என்பவரைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த கொலைச்சம்பவம் அரக்கோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags

Next Story