அரக்கோணம் அருகே வாலிபர் பாம்பு கடித்து உயிரிழப்பு

அரக்கோணம் அருகே வாலிபர் பாம்பு கடித்து உயிரிழப்பு
X
அரக்கோணம் அடுத்த மோசூரில் ரைஸ்மில்லில் வேலைசெய்த ஆந்திர வாலிபர் பாம்பு கடித்து உயிரிழந்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மோசூரில் செயல்பட்டு வரும் வெங்கடேஸ்வரா ரைஸ்மில்லில் ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த திம்மராஜ், கூலி வேலைப்பார்த்து வந்தார். அவர் ரைஸ்மில்லில் நெல்வேக வைப்பது, அரைப்பது போன்ற வேலைகளைை செய்து அங்கேயே தங்கி வந்தார்.

இந்நிலையில். திம்மராஜ் விடியற்காலை வழக்கம் போல எழுந்து ரைஸ்மில்லிற்கு அருகிலுள்ள வயல்வெளிக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த பாம்பு அவரை கடித்ததால் கத்திய அவரை அவருடன் வேலை செய்து வரும் ஆனந்தன், திம்மராஜைை உடனே சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் திம்மராஜ் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிந்த அரக்கோணம் கிராமியப் போலீஸார், பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை சொந்த ஊரான ஆந்திராவிற்குஅனுப்பி வைத்தனர். இச்சம்பவம் ரைஸ்மில் பகுதியில் உள்ளவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!