அரக்கோணம் அருகே கால்நடை மருத்துவ முகாம்: எம்எல்ஏ ரவி துவக்கி வைத்தார்

அரக்கோணம் அருகே கால்நடை மருத்துவ முகாம்:  எம்எல்ஏ ரவி துவக்கி வைத்தார்
X

கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ ரவி 

அரக்கோணம் அருகே அரிகிலபாடியில் கால்நடைமருத்துவ முகாமை எம்எல்ஏ ரவி இன்று துவக்கி வைத்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அரிகிலபாடியில் கால்நடை மருத்துவத்துறை சார்பில் மருத்துவமுகாம் நடந்தது. முகாமை அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி கால்நடைகளுக்கு உப்பு வழங்கி துவக்கிவைத்தார்.

முகாமில் கால்நடை உதவிமருத்துவர் சக்தி தலைமைதாங்கி கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தார் . ஒன்றிய கவுன்சிலர் வினோத்குமார்,ஊராட்சி மன்றதலைவர் வள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமிற்கு வந்த 400க்கும் மேற்பட்ட ஆடு,மாடு மற்றும் கால்நடைகளுக்கு குடற்புழு, மலட்டுத் தன்மை நீக்கம் ஆகிய பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!