தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த வேனில் திடீர் தீ

தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த வேனில்  திடீர் தீ
X

அரக்கோணம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் நிறுவன வேன்

அரக்கோணம் அருகே உள்ள தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த வேன் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமானது

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் அடுத்த சில்வர் பேட்டை பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலைக்கு சென்னை , திருவள்ளூரிலிருந்து இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கம்பெனியருகே வந்தபோது திடீரென வேனிலிருந்து புகை கிளம்பியது .

அதனைக்கண்ட டிரைவர் வேனை நிறுத்தி ஊழியர்கள் அனைவரையும் கீழே இறங்க சொல்லி தானும் இறங்கிச்சென்று தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள், வேன் முழுவதும் தீ பரவி மளமளவென்று கொழுந்து விட்டு எரிந்து சேதமானது. ..

இதனையடுத்து சம்பவ இடத்திறகு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து புகை மண்டலத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே , ஓட்டுநர் சாதுரியமாக அனைத்து ஊழியர்களையும் கீழே இறங்குமாறு கூறியதால் வேனிலிருந்த அனைத்து ஊழியர்களும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர். எனவே அனைவரும் அவரை பாராட்டினர்

மேலும் தகவலறிந்த போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்..

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு