மழையில் வீடிழந்து தவித்த குடும்பத்திற்கு உதவி செய்த நெமிலி ஒன்றிய குழுதலைவர்
மழையில் வீடு இடிந்து விழுந்தவருக்கு ஆறுதல் கூறி உதவி வழங்கிய நெமிலி ஒன்றிய தலைவர் வடிவேலு
இராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்துப்பகுதியிலும் தொடர்ந்து கனமழைப்பெய்து வருகிறது. அதில் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
மழையில் ஏற்பட்டு வரும் பாதிப்புகளையும் வெள்ள சேதங்களைக் கண்டறிய நெமிலி ஒன்றியக் குழுத்தலைவர் வடிவேலு தலைமையில் துணைத்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று மழை சேதங்களை ஆய்வுசெய்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து மழையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர் .
அதில், ஏரிகளுக்கு செல்லும் ஆற்று நீர் கால்வாய்களை ஆய்வுசெய்து உடைப்புகள் மற்றும் அடைப்புகளை சரிசெய்து பரமேஸ்வரமங்கலம். சயனபுரம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு நீர்வரத்தை ஏற்படுத்தி ஏரிகள் நிரம்பும் வாய்ப்புகளை செய்து வருகின்றனர். அதேபோல, மழைவெள்ளம். அரித்துச் சென்றுள்ள கிராமப்புற சாலைகளையும் முன்னின்று சரிசெய்து வருகின்றனர்..
இந்நிலையில் ,நெமிலி ஒன்றியத்தைச் சேர்ந்த இலுப்பைத்தண்டலத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவரது கூரைவீடு மழையில் ஊறி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அவரது மகள் வைஷ்ணவி(16) இடிபாடுகளில் சிக்கி காயமடைந்து சென்னை அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார் .
இதுகுறித்து தகவலறிந்த நெமிலி ஒன்றியக்குழுத் தலைவர் வடிவேலு அங்கு சென்று இடிந்து கிடக்கும் இளையராஜா வீட்டைப் பார்வையிட்டு அவருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.
அப்போதுநெமிலி வட்டாரவளர்ச்சி அலுவலர் செல்வகுமார்,ஒன்றிய குழு உறுப்பினர். விநாயகம், இலுப்பை தண்டலம் பஞ். தலைவர் அனுசுயா ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu