திருநங்கை மர்ம மரணம் அரக்கோணம் போலீஸ் விசாரணை

அரக்கோணம் மருத்துவ மனையிலிருந்து திருநங்கை ஆம்புலன்ஸில் மேல்சிகிச்சைக்குப் போகும் போது வழியில் மரணம் அடைந்தது குறித்து அரக்கோணம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்
.காஞ்சிபுரம் மாவட்டம் ஒரிக்கை பகுதியை சேர்ந்தவர் மணி அவரது மகன் குமரன்(28) திருநங்கையான அவர்பெற்றோரைப்பிரிந்து அரக்கோணம் அடுத்த கும்மிடிப்பேட்டையில் தனியாக தங்கி வந்தார் இந்நிலையில் நேற்று குமரன் உடல் நலக்குறைவு காரணமாக அரக்கோணம் அரசு மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .. இன்று மாலை மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர் . ஆம்புலன்ஸ் திருவள்ளூர் அருகே சென்றபோது திருநங்கை குமரன் பரிதாபமாக இறந்தார் . உடனே அவரது சடலம் பிரேத பரி சோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருநங்கை குமரனின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu