குன்னத்தூர் கிராம தேவதை குன்னியம்மனுக்கு ஊஞ்சல் சேவை
சிறப்பு அலங்காரத்தில் குன்னத்தூர் குன்னியம்மன்.
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குன்னத்தூர் குளக்கரையில் கிராமதேவதையாக வீற்றுள்ள குறைதீர்த்த குன்னியம்மன் கோயிலில் ஆடி அமாவசைத்திருவிழா கோலாகலமாக நடந்த்து.
விழாவையொட்டி காலை கிராமமக்கள் குளத்திலிருந்து ஜலம் திரட்டி ஊர்வலமாக கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதனைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும. அபிஷேக ஆராதனைகளும் நடந்தது
பின்னர் ,உற்சவருக்கு சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அப்போது ,கிராமமக்கள் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தி வழிபட்டனர்
பின்னர் .கோயில்வளாகத்தில் அம்னுக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியில் ,உள்ளூர்.மற்றம் வெளியூர்களிலிருந்த வந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டுச்சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu