அரக்கோணத்தில் விஷப்பூச்சி கடித்து கூலித்தொழிலாளி திடீர் மரணம்

அரக்கோணத்தில் விஷப்பூச்சி கடித்து கூலித்தொழிலாளி திடீர் மரணம்
X
அரக்கோணம் அடுத்த சோகனூரைச் சேர்ந்த கூலித்தோழிலாளி திடீர் மரணமடைந்தது குறிந்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ,அரக்கோணம் அடுத்தச் சோகனூரைச் சேர்ந்தவர் ராகவன் (45) கூலி வேலை செய்து வந்தார். இவர், தனது ஆடுகளுக்கு தழை மற்றும் இலைகளை மரங்களிலிருந்து பறித்து கொண்டிருந்தார். அப்போது அவரை விஷப்பூச்சி கடித்ததாக தெரிகிறது. ஆனால் அதையறியாத ராகவன் வீட்டிற்கு வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ராகவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் அரக்கோணம் தாலூகா போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!