அரக்கோணம் அருகே மண் கடத்தல்; லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
பைல் படம்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர்.கண்டிகையில் ஏரியில் மர்ம நபர்கள் சிலர்பொக்லைன் மூலம் கிராவல் மண் எடுத்து லாரியில் கடத்திச்செல்வதாகவும், அதனால் அப்பகுதியில் ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்து வருகிறது.
.இதுகுறித்து, அரக்கோணம் வட்டாட்சியர் பழனி ராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் அங்கு சென்றார்.
அப்போது, அங்கு பொக்லைன் எந்திரத்தின் மூலம மண்ணை எடுத்து லாரியில் கொட்டிக்கொண்டிருந்த மர்ம நபர்கள் தாசில்தாரை பார்த்து அப்படியே விட்டு தப்பி ஓடினர். உடனே வட்டாட்சியர், அங்கிருந்த லாரி மற்றும் பொக்லைன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தார்.
பின்னர், இதுகுறித்து வட்டாட்சியர் பழனிராஜன் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் செய்து, பறிமுதல் செய்த வாகனங்களை ஒப்படைத்தார். இதனையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து மண் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu