மாற்றுத் திறனாளிகளிக்கு ரூ 62000/- மதிப்பில் விலையில்லா ஸ்கூட்டர்

மாற்றுத் திறனாளிகளிக்கு ரூ 62000/-  மதிப்பில் விலையில்லா ஸ்கூட்டர்
X

மாற்று திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கிய எம்எல்ஏ ரவி

அரக்கோணத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்கூட்டர்களை எம்எல்ஏ சு.ரவி வழங்கினார்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பாரதிதாசனார் பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கான விலையில்லா உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு செய்யும் முகாம் நடந்தது..

முகாமில், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளில் ஸ்கூட்டர் பெறும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தொகுதி மேம்பாடு திட்ட 2021 நிதியின் கீழ் தலா ரூ.62 ஆயிரம் மதிப்புள்ள 8 ஸ்கூட்டர்களை பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மற்றும் அதிமுகவினர் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!