அரக்கோணம் அருகே ரவுடி வெட்டிக்கொலை.

அரக்கோணம் அருகே ரவுடி வெட்டிக்கொலை.
X

அரக்கோணம் அருகே கொலையுண்ட ரவுடி பஸ்வான்

அரக்கோணம் அருகே ரவுடி வெட்டிக்கொலை. கடந்த 23 நாட்களில் அடுத்தடுத்து நடந்த நான்காவது கொலை. தொடர் கொலைகளால் பொதுமக்கள் அச்சம்

அரக்கோணம் அடுத்த மின்னல் காலனியை சேர்ந்தவன் பஸ்வான்(26). அவன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இன்று மதியம் பஸ்வான் ஆவதம் கிராமம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனியாக நின்றிருந்த போது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலூகா போலீஸார்,சம்பவம் இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் கொலையான பஸ்வானால் கொலையுண்டவரின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் பழி வாங்கும் செயலாக இக்கொலைச்சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர.

சம்பவம் குறித்துஅறிந்த மாவட்ட எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டார்.

அரக்கோணம் பகுதியில் கடந்த 6 ம் தேதியிலிருந்து கார்த்தி, கௌதம், கோதண்டனைத் தொடர்ந்து 4வதாக ரவுடி பஸ்வான் கொலை செய்யப்பட்டு்ள்ளார். அடுத்தடுத்து நடக்கும் கொலைச்சம்பவம், அரக்கோணம் போலீஸ் உட்கோட்டப் பகுதி வாழ் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!