அரக்கோணம் அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியைக்காட்டி பணம்பறிப்பு

அரக்கோணம் அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியைக்காட்டி பணம்பறிப்பு
X
அரக்கோணம் அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியைக்காட்டி பணம் பறிப்பு. தொடர்ந்து நடக்கும் குற்றங்களால் பீதியில் பொதுமக்கள்

அரக்கோணம் அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பணம்பறித்த 3பேரில் ஒருவன் கைது மற்ற இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வரமங்கலத்தைச் சேர்ந்த திருமலைவாசன். அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் சாலையில் அவரது வீட்டிற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது தக்கோலம் கூட் அருகே வந்த கொண்டிருந்த அவரை மூன்று பேர் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ 700ஐ பறித்து சென்றனர். இது குறித்து திருமலைவாசன் தக்கோலம் போலீஸில் புகார் செய்தார் .

அதன் பேரில் விசாரத்துவந்த போலீஸார் தக்கோலம் சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில. சென்ற ரவிக்குமார் என்பவனை பிடித்து விசாரித்ததில் வழிப்பறி செய்தது தெரியவந்தது . அவனை கைது செய்து அவனிடமிருந்து இருநூறு மற்றும் விலையுயர்ந்த பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் மாதேஷ், கோட்டிஸ்வரன் ஆகிய இருவரை போலீஸ்சார் தேடி வருகின்றனர்.

அரக்கோணம் பகுதியில் கடந்த சிலவாரங்களாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!