அரக்கோணம் அருகே துப்பாக்கி ,கத்தியால் வெட்டி பணம் , நகை கொள்ளை.

அரக்கோணம் அருகே துப்பாக்கி ,கத்தியால் வெட்டி பணம் , நகை கொள்ளை.
X

பைல் படம்.

அரக்கோணத்தில் நள்ளிரவில் தனியாக இருந்த வீட்டில் கைத்துப்பாக்கியால் சுட்டு கத்தியால் வெட்டி தங்கநகை மற்றும் 60 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அவினாசிகண்டிகை அருகே கன்னிகாபுரம் கண்டிகையைச் சேர்ந்தவர் புஷ்கரன் இவர் ஆடிட்டர் ஆக பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் உள்ள மாந்தோப்புக்கு இடையே தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில்

நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கைத்துப்பாக்கி (ஸ்போர்ட்ஸ் கன்)மற்றும் கத்தியால் புஷ்கரன் 25, அவரது தாயார் சுதா 52 பெரியம்மா லதா 56 ,பாட்டி ரஞ்சிதா 75 , அவர்களை கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் வெட்டி வீட்டில் இருந்த 25 சவரன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கொள்ளையர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் புஷ்கரன் மற்றும் அவரது தாய் சுதா பெரியம்மா லதா ரஞ்சிதா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தற்போது சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

தனியாக இருக்கும் வீட்டை குறிவைத்து மர்ம நபர்கள் இதுபோன்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் நகர காவல் துறையினர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர் அப்பொழுது

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் வீட்டை சுற்றிலும் மிளகாய்ப் பொடி மற்றும் பேஸ்ட் ஷாம்பு ஆகியவற்றால் வீசிச் சென்றுள்ளனர்

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அரக்கோணம் நகர காவல்துறையினர் விசாரனை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்கள். கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகள் பேசியதாக கூறப்படுகிறது. இவர்கள் வட இந்திய கொள்ளையர்களா என்கிற கோணத்தில் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்

மேலும் இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் மற்றும் அரக்கோணம் துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!