பூகம்பத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை

பூகம்பத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை
X

பூகம்பத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நடைபெற்றது 

அரக்கோணத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் தேசியபேரிடர்மீட்புப் படையினருடன் இணைந்து பூகம்ப இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரிகுப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் மண்டலப் பயிற்சி முகாம் இயங்கி வருகிறது. அதேபோல அருகிலேயே மத்திய தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் 4வது பட்டாலியன் உள்ளது .

இந்நிலையில் இருபடையினரும் மாநில தீயணைப்படையிருடன் சேர்ந்து நிலநடுக்கம் போன்ற பேரிடர்களில் கட்டிடம் இடிந்த விழுந்து தகவல் கிடைத்தும் மீட்புப்பணிகளில் விரைவாக ஈடுபடுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சிஐஎஸ்எப் பயிற்சி வளாகத்தில் நடந்தது.

மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை தத்ரூபமாக செய்து காட்டினர்..

அதனைத்தொடர்ந்துமீட்கப்பட்ட வர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தல் போன்றவைகளின் ஒத்திகைகள் நடந்தன.

ஒத்திகைகளில் சிஐஎஸ்எப் கமாண்டன்ட் கவுரவ்தோமர் தலைமையில் 60 வீரர்கள், என்டிஆர்எப் கமாண்டன்ட் கபில்வர்மா தலைமையில் 35 வீரர்கள் அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையில் தீயணைப்பு படையினர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil