அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போர்ட்டர் மாரடைப்பில் மரணம்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போர்ட்டர் மாரடைப்பில் மரணம்
X
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போர்ட்டராக இருந்த கூலித்தொழிலாளி திடீர் மாரடைப்பால் காலமானார்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அற்புதராஜ். அவர் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சுமைதூக்கும் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கொரோனாவால் ரெயில் போக்குவரத்தின்றி ரெயில் நிலையம் காணப்பட்ட நிலையில் அற்புதராஜ் இன்று வழக்கமாக ரெயில்நிலையத்தில் வந்து இருந்தபோது, அவருக்கு திடீரென மார்புவலி ஏற்பட்டு மயங்கியதாகக் கூறப்படுகிறது. அருகிலிருந்தவர்கள் இது குறித்து ரெயில்வே போலீஸிடம் கூறினர். உடனே வந்த போலீஸார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அற்புதராஜ் ஏற்கனவெ இறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்