அரக்கோணத்தில் சென்னை பெருநகர விரிவாக்க கருத்து கேட்புப்கூட்டம்

அரக்கோணத்தில் சென்னை பெருநகர விரிவாக்க கருத்து கேட்புப்கூட்டம்
X

சென்னை பெருநகர விரிவாக்கம் குறித்து அரக்கோணத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது

அரக்கோணத்தில் சென்னைப்பெருநகர விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம். தாலூக்காவிலிருந்து சிலகிராமங்களை சேர்த்து சென்னை மாநகரப்பெருவளர்ச்சிகாரணமாக எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. எனவே எல்லை விரவாக்கம் குறித்து சம்பந்தபட்ட கிராமமக்களிடமிருந்து கருத்து கேட்பு கூட்டம் அரக்கோணம் நகர அரங்கில் நடந்தது .

கூட்டத்திற்கு வீட்டு வசதிமற்றும் நகர்புறவளர்ச்சித்துறை முதண்மைச் செயலாளர் மக்வானா தலைதாங்கினார். சென்னைப் பெருநகரம் வளர்ச்சிக் குழுமம் மற்றும் செயலர் அன்ஷுல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர், சென்னைப்பெருநகரவளர்ச்சிக் குழுமம் லஷ்மி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன், அரக்கோணம் ஆகியோர். சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் கருத்துக்கேட்பு கூட்டத்தில் சென்னைப்பெருநகர எல்லை விரிவாக்கம் செய்ய உள்ள கிராம மக்களின் கருத்துக்களைக் கேட்டனர். அதில் பல விபரங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது .

கூட்டத்தில் சென்னைப். பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைமை திட்ட அமைப்பாளர் முருகன், அரக்கோணம் ஓன்றியக் குழுத்தலைவர. நிர்மலா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அம்பிகா மற்றும் பெருநகரவளர்ச்சிக் குழும்ம் மூத்த உறுப்பினர் கஞ்சனமாலா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!