வீட்டிலிருந்து விரக்தியில் வெளியேறிய அரக்கோணம் வாலிபர் மீட்பு
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனி பேட்டை சோமசுந்தரம் நகரைச் சேர்ந்த ஜோதிராஜ் மகன் சுனில்(37) அவருடன் அவரது,மனைவி ஸ்டெல்லா,10 மாத பெண் குழந்தை மற்றும் பெற்றோருடன் சேர்ந்து ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலை எதுவும் இல்லாததால் சுனில் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். தற்போது அவர் மனைவி ஸ்டெல்லா குழந்தையுடன் அவரது தாய் வீடான கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூரில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சுனிலிடம் அவரது பெற்றோர்கள் வேலைக்குச் சென்று சம்பளத்தை தருமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர். சுனில் தனக்கு வேலை எதுவும் கிடைக்காத நிலையில், பெற்றோர் வற்புறுத்தி வருவதால் விரக்தியடைந்த அவர் கடந்த 4ந்தேதி கோவையிலுள்ள தனது மனைவியிடம் போத்தனூர் வருவதாக செல்போனில் தெரிவித்தார். தனது கணவர் சுனில வீட்டிற்கு வருவார் என எதிர்பார்த்து அவர் வராததால் ஸ்டெல்லா, அவரது கணவர் சுனிலை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போன் அரக்கோணத்திலுள்ள அவரது வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளதை மனைவி ஸ்டெல்லா அறிந்தார்.
மூன்று நாட்களாகியும் சுனில் வீட்டிற்கும் வராததால் அவரை ,அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சுனில் கிடைக்காததால் இது குறித்து கடந்த 7-ஆம் தேதி அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். அப்புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசாரும் காணமல் போன சுனிலை தேடி வந்த போது அவர் மும்பை ரெயிலில் சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து தேடியதில் ஆந்திர மாநிலம் குண்டூரில் சுனில் இருப்பதாக பொலீஸுக்கு தகவல் கிடைத்தது. உடனே ரெயில்வே போலீசார் அங்குள்ள போலீசாரிடம் தொடர்பு கொண்டு சுனிலை பிடித்து பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறினர். குண்டூர் சென்ற அரக்கோணம் ரெயில்வே போலீஸார் சுனிலை அழைத்து வந்து அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu