போலி வாரிசு சான்றிதழ் மூலம் பணியில் சேர முயற்சித்தவர் கைது

போலி வாரிசு சான்றிதழ் மூலம் பணியில் சேர முயற்சித்தவர் கைது
X

போலி வாரிசு சான்றிதழ் மூலம் பணியில் சேர முயற்சித்தவர் 

அரக்கோணம் அருகே போலி வாரிசு சான்றிதழை வைத்து வேலைக்கு மனு செய்தவரைப் போலீஸார் கைது செய்தனர்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரிதிப்புத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ். இவருக்கு சகோதரர் மற்றும் சகோதரிகள் உள்ளனர். இந்நிலையில், தான்மட்டும் உள்ளதாக போலி வாரிசு சான்றிதழ் பெற்று அதன்மூலம் அவரது தாயார் பெயரில் உள்ள சொத்தை விற்க கோவிந்தராஜ் முயற்சித்து வருவதாக அவரது சகோதரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்

அதன் பேரில், விசாரணை செய்ய நெமிலி வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள், கோவிந்தராஜ் பெற்றுள்ள வாரிசு சான்றிதழ்,நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளதா? என்று விசாரித்தபோது அந்த சான்றிதழ் போலியானது என்று உறுதி செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து தற்போதய நெமிலி வட்டாட்சியர் சுமதி, கோவிந்தராஜ் மீது அரக்கோணம் போலீஸில் புகார்செய்தார்.

புகாரின் பேரில் போலீஸார், கோவிந்தராஜைக் கைது செய்து விசாரித்ததில் போலியாகப் பெற்ற சான்றிதழ் மூலம் அரசு வேலைக்கு முயற்சித்து வருவதாக தெரியவந்தது. மேலும் போலி சான்றிதழை எங்கு எவ்வாறு பெற்றார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story