மூடியே இருக்கும் அரக்கோணம் நகர நில அளவு சார் ஆய்வாளர் அலுவலகம்

மூடியே இருக்கும் அரக்கோணம் நகர நில அளவு சார் ஆய்வாளர் அலுவலகம்
X

பூட்டியிருக்கும் அலுவலக வாசலில் காத்திருக்கும் பொதுமக்கள்

அரக்கோணம் நகர நில அளவை சார் ஆய்வாளர் அலுவலகம் மூடியே இருப்பதாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ,அரக்கோணம் நில அளவை பதிவேடுகள் துறை நகர சார் ஆய்வாளர் அலுவலகம் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் எப்போது வந்து பார்த்தாலும் மூடியே உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பூட்டியிருந்த அலுவலக வாயில் முன்பு அமர்ந்து 20 க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, சொத்துகளை பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன் லைன் முலம் விண்ணப்பித்து பட்டா பெறலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அரக்கோணம் மற்றும் நெமிலி தாலூகாவில் நேரிடையாக நில அளவை ஆய்வாளரிடம் மனு அளித்தால் பெயர் மாற்றம் செய்யப்படுவதில்லை. நேரிடையாக மனு அளிக்கும் பொதுமக்களிடம் தேவையான பதிவேடுகள் இல்லை,வில்லங்க சான்றிதழ் காலம் போதாதது, முந்தைய தாய் பத்திரங்கள் இல்லையென கூறி ஆண்டு கணக்கில் அலைக்கழிப்பது அலுவலர்களின் வாடிக்கையாக உள்ளது . என்று கூறினர்.

அதில்,அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் நில அளவை பதிவேடுகள் துறை, நகர சார் ஆய்வாளர் அலுவலகம் எப்போதுதான் திறந்திருக்கும் என்பது தெரியாமலே பொதுமக்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு பலமுறை புகார்அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்..

பொதுமக்கள்,முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் ,அதிகாரிகள் யாரும் அதனைக்கண்டு கொள்ளாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்களின் வேண்டுகோளை மாவட்ட நிர்வாகம் கவனித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story