/* */

அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு

மக்கள் அச்சமில்லாமல் வாக்களிப்பதற்காக துணை ராணுவ படை,போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு
X

அரக்கோணத்தில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவ படை மற்றும் காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் (தனி) தொகுதியில் உள்ள மக்கள் அச்சமின்றி வாக்கு பதிவுசெய்ய விதமாக காவல்துறை மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்த அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்கருப்பன் மற்றும் அரக்கோணம் உட்கோடட காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன், எல்லைப் பாதுகாப்பு படையில் துணை தளவாய் பிரதான் சாப், உதவி தளவாய் ராஜேந்திர சிங், சாஸ்வத் ஆச்சாரியா,5 உதவி ஆய்வாளர்கள் 160 படை வீரர்களும் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

இந்தக் கொடி அணிவகுப்பு அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து சுவால்பேட்டை, பழைய பேருந்து நிலையம்,பஜார் வழியாக எஸ் ஆர் கேட் வரை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.


Updated On: 30 March 2021 10:47 AM GMT

Related News