சென்னை-காட்பாடி இடையே மின்சார ரயில் இயக்க திட்டம் இல்லை: ரயில்வே பொது மேலாளர்
அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு செய்த பொது மேலாளர் ஜான் தாமஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
சென்னை,-காட்பாடி இடையேமின்சார ரயில்கள் இயக்க திட்டம் இல்லை: ரயில்வே பொது மேலாளர் பேட்டி.
அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து காட்பாடிக்கு மின்சார ரயில்கள் இயக்கும் திட்டமில்லை, அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது, ரயில் ஓட்டுனர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை மையம், குடிநீர் பாட்டில்களை அழிக்கும் இயந்திரம் , விண்டர்பேட்டையில் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஏசி வசதி கொண்ட தங்குமிடம் ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார்.
அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனை ஆய்வு செய்த பொது மேலாளர் ஜான் தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் இருந்து காட்பாடிக்கு மின்சார ரயில்கள் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை. விரைவு ரயில்களில் பொது பெட்டிகள் இணைப்பது விரைவுபடுத்தப்படும். மின்சார ரயில்களில் பயணம் செய்யும் போது சாககத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மோசூர் ரயில்வே ஆக்கரமிப்புக்கள் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, பொதுச் செயலாளர் குணசீலன் ஆகியோர் பொது மேலாளரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் உள்ள மூன்றாவது கண் ரயில்வே சுரங்கப்பாதையை சரி செய்ய வேண்டும். அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு அரை மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரயில், திருத்தணியில் இருந்து சென்னை செல்லும் ரயில்களில் ரிட்டன் டிக்கட், அரக்கோணத்திலிருந்து திருவண்ணாமலைக்கு புதியதாக ரயில் இயக்கம், அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தார். இந்நிகழ்ச்சியில் ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu