இந்திய கடற்படையில் புதிய இலகு ரக ஹெலிகாப்டர்கள்: தலைமைத்தளபதி அஜேந்திரா பகதூர்சிங்
அரக்கோணம் ராஜாளியில் 96வது பயிற்சி நிறைவு விழாவில், இந்திய கடற்படைத்தலைமை தளபதி அஜேந்திரா பகதூர்சிங், பைலட்டுகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இந்திய கடற்படையின் சார்பில் விமானம் மூலம் கடலோர எல்லைகளைக் கண்காணித்து வரும் ராஜாளியில், பைலட்டுகளுக்கான ஹெலிகாப்டர் பயிற்சிப்பள்ளி கடந்த 1992லிருந்து இயங்கி வருகிறது. அதில் கடற்கரையில் தாழ்வானப் பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று உற்று நோக்குதல் உள்ளிட்ட பல பயிற்சிகள் 6மாத காலம் பைலட்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது பயிற்சியை முடித்த 7பைலட்டுகளுக்கு 96வது பயிற்சி நிறைவு விழா நடந்தது. அவ்விழாவில் சிறப்பு அழைப்பளராக கலந்து கொண்ட இந்திய கடற்படைத்தலைமை தளபதி அஜேந்திரா பகதூர்சிங், திறந்த வெளி ஜீப்பில்சென்று கடற்படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு அவர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சி முடித்த 7பைலட்டுகளுக்கு சான்றிதழ்களை வழங்கிய அவர் சிறப்பாக பயிற்சி முடித்த பைலட்டுகளுக்கு கேடயத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக பயிற்சிபெற்ற பவன்ராஜ் என்ற பைலட்டுக்கு கேரள கவர்னர் சுழற்கோப்பை விருதினை வழங்கினார்.
விழாவின் நிறைவாக பேசிய தலைமைத்தளபதி அஜேந்திரா பகதூர்சிங், இந்திய கடற்படையில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர் சேர்க்கப்பட உள்ளது. மேலும் எம் எச் 60 ஆர் என்ற மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஹெலிகாப்டர், மற்றும் புதிய வகை இலகு ரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவிலிருந்து வர உள்ளதாகவும், விரைவில் அவை கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படும். இதன் மூலம் இந்திய கடற்படையின் பலம் அதிகரிக்கும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu