நூலக வார விழாவில் புதிய கட்டிடம்: ஒன்றியக்குழுத் தலைவர் உறுதி
நூலகத்தின் நீண்டகால வாசகர்களுக்கு நூலக புரவலர் சான்றுகளை வழங்கிய நெமிலி ஒன்றியக்குழுத் தலைவர் வடிவேலு
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தைச் சிறுணமல்லி பஞ்சாய்த்திற்கு உட்பட்ட சம்பத்துராயன் பேட்டையில் உள்ள நூலகத்தில் நூலக வாரவிழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சிமன்றத் தலைவர் ஜோதி தலைமைதாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சங்கரி,ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நெமிலி ஒன்றியக்குழுத் தலைவர் வடிவேலு நூலகத்தின் நீண்டகால வாசகர்களுக்கு நூலக புரவலர் சான்றுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.
அதில் தற்போது நூலகத்திற்கு வாசகர்கள் வருவது குறைந்து வருகிறது . இளைஞர்கள் நூலகத்திற்கு கட்டாயம் வரவேண்டும் , நமது முன்னோர்கள் மற்றும் பல பெரியவர்கள் நூலகப் புத்தகங்களைப் பயின்று சான்றோராகவும் வாழ்க்கையில் உயர்வடைந்துள்ளனர். அரசு தேர்வுகளில் வரும் கேள்விகள் பலவற்றிற்கு பதில் நூலகத்தில்உள்ள புத்தகங்களில் உள்ளது.
ஆகவே, பலவித நாளேடுகள்,வார இதழ்கள் படித்தும் வேலைவாய்ப்புச் செய்திகள் குறித்து அறிந்து பயனடைய இளைஞர்கள் கட்டாயம் நூலகத்திற்கு வந்து வாய்ப்புகளை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் அவர் தற்போது உள்ள கட்டிடத்திற்குப் பதிலாக விரைவில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விழாவில் , சிறுணமல்லி ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu