முப்படைத் தளபதிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அஞ்சலி.

முப்படைத் தளபதிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அஞ்சலி.
X

தேசியப் பேரிடர் மீட்பு 4வது பட்டாலியனில் முப்படை தலைமை தளபதிக்கு மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அரக்கோணத்தில் உள்ள தேசியப் பேரிடர் மீட்பு 4வது பட்டாலியனில் முப்படை தலைமை தளபதிக்கு மலர்களைத் தூவி அஞ்சலிசெலுத்தினர்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் தேசியப்பேரிடர் மீட்புப்படையினரின் 4வது பட்டாலியன் முகாம் இயங்கி வருகிறது.

பட்டாலியனில் அரக்கோணம் கமாண்டன்ட் கபில்வர்மன், துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் ஆகியோர் தலைமையில் மீட்புப்படையினர் குன்னூர் விமான விபத்தில் உயிரிழந்த முப்படைத்தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மறைவிற்கு மலர் வளையம் வைத்து மௌனஅஞ்சலி செலுத்தினர்..

அதனைத் தொடர்ந்து அவருக்கு அதிகாரிகள், வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்..

Tags

Next Story
ai in future agriculture