அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

சைக்கிள் பேரணி நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திய தேசிய பேரிடர் மீட்புப்படையினர்.

அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சைக்கிள் பேரணியை நடத்தினர்.

இந்தியா சுதந்திரம் பெற்று 75வது ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் வகையில் ' ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவ்' என்ற பெயரில் மத்திய அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 4வது பட்டாலியன் கம்பெனி சார்பில் 'அம்ரித் மகோத்சவ்' சிறப்பான விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் சைக்கிள் பேரணி அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மையத்தில் இருந்து துவங்கியது.

இந்த பேரணி தக்கோலம், அனந்தாபுரம், புது கேசாவரம், சகாய தோட்டம், உரியூர் ஆகிய கிராமங்கள் வழியாக சுமார் 50 கி .மீ தூரத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் மற்றும். வீர்ர்கள் 250க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் சென்று பொதுமக்களுக்கு சுற்றுசூழல்பாதுகாப்பின் அவசியம் குறித்தும், அதனால் வரும் எதிர்கால சந்ததியினருக்கு இயறகையின் தூயமையான காற்று, உணவு , நீர் ஆகியவற்றை வழங்குவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதேபோல உடற்பயிற்சியினால் தேக ஆரோக்கியம் குறித்தும் விளக்கினர் .

முன்னதாக பேரணியை, தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தின் கமாண்டன்ட் கபில் வர்மன் மற்றும் துணை காமண்டன்ட் வைத்தியலிங்கம் ஆகியோர் இருவரும் சேர்ந்து கொடியசைத்து சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil