/* */

கொரோனா விதிகளை மீறிய அமைச்சரின் தேர்தல் பிரச்சாரம்

அரக்கோணம் அருகே கொரோனா விதிகளை கடைப்பிடிக்காமல் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

HIGHLIGHTS

கொரோனா விதிகளை மீறிய அமைச்சரின்  தேர்தல் பிரச்சாரம்
X

கொரோனா விதிகளை கடைப்பிடிக்காமல் பிரச்சாரம் செய்யும் அமைச்சர்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க உள்ளது.

அதில் மாவட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அரக்கோணம் மற்றும் காவேரிப்பாக்கம் ஒன்றியங்களில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

அவர், அரசு அறிவித்துள்ள கொரோனா நோய்தடுப்பு விதிகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிகளை காற்றில் பறக்கவிட்டு அமைச்சரே பிரச்சாரம் செய்துவருவதைக் கண்டு அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. மேலும், 3வது அலை தாக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை அறிவித்துள்ளனர். தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், அரசு விதிகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அமைச்சர் பெருமக்கள் அரசு விதிகளை சற்றும் மதியாமல் நடந்து வருவது வேதனையளிப்பதாக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Updated On: 29 Sep 2021 2:24 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...