எதிரி நாடுகளுக்கு சவால் விடும் அளவிற்கு இந்திய கடற்படை வலிமை பெற்றுள்ளது
அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக பயிற்சி பெற்ற லெப்டினன்ட் அமித் சங்குவான் என்ற பைலட்டுக்கு சுழற்கோப்பை விருதினை வழங்கிய ரியர் அட்மிரல் பிளிபோஸ் G.பைனுமூட்டில்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் 97வது ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழா நடந்தது. விழாவில் இந்திய கடற்படை விமான பிரிவு தலைமை அதிகாரி மற்றும் கோவா கடற்படை பிரிவு தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் பிளிபோஸ் G.பைனுமூட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
அதில் ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி முடித்த 20 பைலட்டுகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து , பயிற்சியின் போது அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக பயிற்சி பெற்ற லெப்டினன்ட் அமித் சங்குவான் என்ற பைலட்டுக்கு சுழற்கோப்பை விருதினை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ரியர் அட்மிரல் பிளிபோஸ் G.பைனுமூட்டில், இந்திய கடற்படையில் அதி நவீன போர்க் கருவிகள் சேர்க்கப்பட்டுள்ளது எதிரிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இந்திய கடற்படை வலிமையாக உள்ளது என்றார்.
மேலும்,இந்திய கடற்படையின் பலம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும்அவர் தெரிவித்தார்.
பயிற்சியில் ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கு , கடல் மேல் குறைந்த உயரத்தில் இயக்குதல், இரவு நேரத்தில் இயக்குதல் உள்ளிட்ட கடினமான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது எனவே பணியில் சிறந்து விளங்குவார்கள் என்றார்.
மேலும், கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபட உள்ளதால் நாட்டின் பாதுகாப்பு பணியில் அவர்களின் பணி முக்கியமானது ,என்று அவர் கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில், விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்பு ,திறந்த வெளி ஜீப்பில் சென்று கடற்படை வீரர்களின் அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu