மனிதத்தலையுடன் வந்த இரயிலால் அரக்கோணத்தில பரபரப்பு

மனிதத்தலையுடன் வந்த இரயிலால் அரக்கோணத்தில பரபரப்பு
X

இஞ்சினில் சிக்கியிருந்த மனிதத்தலை

அரக்கோணம் இரயில் நிலையத்திற்கு வந்த பெங்களுரு இரயிலில் இன்ஜினில் இருந்த மனிதத்தலையால் பரபரப்பு ஏற்பட்டது.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் இரயில் நிலையத்திற்கு, அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் இருந்து சென்னை மார்க்கமாக பெங்களூரு செல்லும் வாரந்திர இரயில் வந்து நின்றது. உடனே பயணிகள் இரயிலில் ஏற முயற்சித்தனர் .

அப்போது இரயில்இன்ஜினின் முன்பாக ஆணின் தலை துண்டாகி இரத்தம் சொட்டிய நிலையில் ஒட்டியிருப்பதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்ட படி இன்ஜின் டிரைவரிடம் கூறினர். அதனைக்கேட்ட டிரைவர், உடனே இரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்

அதன்பேரில் வந்த போலீஸார் தலையை மீட்டு உடலைத் தேடிவருகின்றனர். மேலும் .போலீஸார், இறந்தவரின் அடையாளம்,மற்றும் இறப்பு குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

மனிதத்தலையுடன் வந்த இரயில் குறித்த தகவலால் அரக்கோணத்தில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!