ரயில்வே தண்டவாளத்தில் அரைகுறையாக எரிந்துகிடந்த ஆண் சடலம்: போலீஸார் விசாரணை

ரயில்வே தண்டவாளத்தில் அரைகுறையாக எரிந்துகிடந்த ஆண் சடலம்: போலீஸார் விசாரணை
X

பைல் படம்.

அரக்கோணம் அடுத்த திருமால்பூர் ரயில்நிலைய தண்டவாளத்தில் அரைகுறையாக எரிந்து கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த திருமால்பூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 100மீ லூப் லைன் தண்டவாளத்தில் அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு ரயில்வே போலீஸார் தண்டவாளத்தில் காலி மதுபான பாட்டில்கள் சிதறியபடி பாதி எரிந்தநிலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரின் சடலத்தைக்கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் போலீஸார் முதற்கட்டமாக இறந்து கிடந்த நபர் குறித்தும், அவரது இறப்புகுறித்தும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சம்பவஇடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!