அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது - ரயில் சேவை பாதிப்பு

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது - ரயில் சேவை பாதிப்பு
X

கோப்பு படம் 

அரக்கோணம் அருகே மோசூர் என்ற இடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அரக்கோணம் - மோசூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும் போது, சரக்கு ரயிலின் 22, பெட்டிகள் தடம் புரண்டதாக முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தால், சென்னை - அரக்கோணம் இடையே ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு ரயிலில் அலுவலகம் செல்வோர், இதனால் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். சரக்கு ரயில் விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் மீட்பு வாகனங்கள் விரைந்துள்ளன. விபத்து குறித்த முழு விவரங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

Tags

Next Story
future ai robot technology