அரக்கோணம் அருகே தண்ணீர் தேடி வரும் மான்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி பலியாகும் சோகம்

அரக்கோணம் அருகே  தண்ணீர் தேடி வரும் மான்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி பலியாகும் சோகம்
X

மாதிரி படம்

அரக்கோணம் அருகே காஞ்சிபுரம் சாலையில் வாகனம் மோதி தண்ணீர் தேடி வந்த நிறைமாதம் கர்ப்பமான மானும் குட்டியும் உயிரிழந்ததன

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து வழி தவறி இன்று விடியற்காலை நிறை கர்ப்பமாக இருந்த புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி கிராம பகுதிக்கு வந்து காஞ்சிபும் செல்லும் சாலையை கடக்க முயன்றது.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மான் மீது மோதியது. அதில் அடிப்பட்டு தோல் உறிந்து, உடல் சிதறி மானும், வயிற்றிலிருந்த குட்டியும் இறந்து கிடந்தன. கோரமான அந்த காட்சியை பார்த்து அவ்வழியே சென்ற பொது மக்கள் கண்கலங்கி சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து அரக்கோணம் தெற்கு வருவாய் ஆய்வாளர் தினகரன் மற்றும் வி.ஏ.ஓ குமரவேல் ஆகியோர் இறந்து கிடந்த மான் குறித்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் மானின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பின்பு அதே பகுதியில் எரித்தனர்.

அரக்கோணம் பகுதியில் உள்ள காடுகளில் இருந்து தண்ணீர் தேடிவரும் மான்கள் தொடர்ந்து இது போன்று இறந்து வருகின்றன. எனவே இதனைத் தடுக்க வன துறையினர் அலட்சியம் செய்யாமல், அவைகளுக்கு வனப்பகுதிகளிலேயே தண்ணீர் தொட்டி அமைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை வனத்துறையினருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!