அரக்கோணம் அருகே கடன் பிரச்சினையால் கணவன்- மனைவி தூக்கிட்டு தற்கொலை

அரக்கோணம் அருகே கடன் பிரச்சினையால் கணவன்- மனைவி தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட கணவன்- மனைவி

அரக்கோணம் அருகே கடன் பிரச்சினையால் கணவன்- மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூரைச் சேர்ந்தவர் பாபு (38)இவரது மனைவி கிருஷ்ணவேணி (32) இருவரும் சேர்ந்து அப்பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தனர் .

பாபு, வியாபாரத்திற்காக சிலரிடம் கடன் வாங்கியதாகவும் அதை திருப்பி செலுத்தமுடியாமல் சிரமப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடையில் வியாபாரத்தின் போது பாபுவிடம் , கடன் கொடுத்தவர் ஒருவர் வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவன்- மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டது.இதன் காரணமாக வீட்டுக்குப்போன கிருஷ்ணவேணி தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற பாபு மனைவி தூக்கில் சடலமாக தொங்கியது கண்ட அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அரக்கோணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடன் பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!