அரக்கோணத்தில் பெட்ரோலியபொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரக்கோணத்தில் பெட்ரோலியபொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

அரக்கோணம் அண்ணா சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

அரக்கோணத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டை அண்ணா சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகா செயலாளர் ஏபிஎம் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கோஷம் எழுப்பினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்