ராணிப்பேட்டையில் கொரோனா 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

ராணிப்பேட்டையில் கொரோனா 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
X

ராஷ்ட்ரசேவிகா சமிதி சார்பாக நடந்த கொரோனா 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

ஆறகாட்டில் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் கொரோனா மூன்றாவது அலை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் உள்ள சரஸ்வதி வித்யாமந்திர் பள்ளி மற்றும் ராஷ்ட்ரசேவிகா சமிதி சார்பாக பள்ளி வளாகத்தில் கொரோனா 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது .

முகாமிற்கு ,பள்ளி உதவி தலைமையாசிரியை சித்திரகுமாரி தலைமைதாங்கினார். தலைமையாசிரியர் நாகராஜன் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். ஆசிரியை ஜெயல்லிதா கணேஷ் வரவேற்பு உரையாற்றினார். ஹேமப்பிரியா தனிப்பாடல் பாடினார்.

பின்னர், பள்ளிஆசிரியைகள் உமாதேவி, ப்ரீதி,பவானி ஆகியோர் நிகழ்ச்சியில் நோய் தடுப்பு வழிமுறைகளாக யோகாசனம், சூரியநமஸ்காரம் பள்ளி விடுமுறையின் போது குழந்தைகளுக்கு ஊக்கம் தரும் விளையாட்டு அவற்றின் நன்மைகள் குறித்து செய்து காட்டி விளக்கமளித்தனர்.

முகாமின் சிறப்பு அழைப்பாளர்கள் குடும்பநல மருத்துவர் அல்லிராணி நோய்தொற்று பரவாமல் முகக்கவசம் சமூக இடைவெளி கிருமிநாசினி போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மருத்துவ ரீதியில் பாதுகாத்துக் கொள்ளும் விதமான ஆலோசனைகளை வழங்கினார்.

அவரைத்தொடந்து பேசிய கோமதி நவீன், மன ரீதியான ஆலோசனைகளை வழங்கினார். முகாமிற்கு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் தாய்மார்கள் மற்றும் அப்பகுதி பெண்கள் பலரும் கலந்து கொண்டு யோகாசனம் மற்றும் மூச்சுப் பயிற்சியினை செய்வதை கற்றுச் சென்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil