படிகட்டில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவன் உயிரிழப்பு

படிகட்டில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவன் உயிரிழப்பு
X

படியில் பயணம் செய்து பேருந்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவன்

நெமிலியடுத்த பள்ளூரில் தனியார் பேருந்தில் படிகட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் கீழே விழுந்ததில் உயிரிழந்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியடுத்த புதுக்கண்டிக்கையைச் சேர்ந்த்ஜெகன் என்பவர் மகன் தினேஷ்குமார்(19), இவர் காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் .

தினேஷ்குமார் கல்லூரிக்குச் சென்று வழக்கம்போல காஞ்சிபுரத்திலிருந்து தனியார் பஸ்ஸில் வீட்டிற்கு திரும்பினார்.

அதில் தினேஷ்குமார் படியில் நின்று பயணித்து வந்ததாகக் கூறப்படுகிறது . வழியில் நெமிலியடுத்த பள்ளூர் பஜனைக்கோயில் அருகே பருந்து வந்து கொண்டிருந்தபோது தினேஷ்குமார் கீழேத் தவறிவிழுந்தார். அப்போது, அவரது வயிற்றுப்பகுதியில் பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. .

அதில், பலத்த காயமடைந்த தினேஷ்குமாரை உடனே காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப்பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நெமிலிப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் ..

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி