அரக்கோணம் அரசுப் பள்ளிகளில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு

அரக்கோணம் அரசுப் பள்ளிகளில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு
X
அரக்கோணம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு மேற்கொண்டார்

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மூடியுள்ள பள்ளிகள் வரும் 1ந்தேதி முதல் மீண்டும் திறக்க அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.

எனவே அதற்கான முன்னேற் பாடாக அரசுப்பள்ளிகளில், வகுப்பறைகள் மற்றும் பள்ளி முழுவதும் தூய்மைப்படுத்தி,கிருமிநாசினிகள் தெளிக்கும்பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில்,இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அரக்கோணத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வ செயதார்

முதலில் அரசு பெண்கள் மேல்நிலைப்ள்ளிக்கு சென்ற அவர் பள்ளி வகுப்பறை,மற்றும் பள்ளிமுழுவதுமாக அசுத்தமாக இருந்ததைக்கண்டு கலெக்டர் அதிருப்தியடைந்தார்.

பின்னர்,அவர் பள்ளி.தலைமையாசிரியை சுஜா தேவியிடம் பள்ளி திறக்க 2 நாட்களே உள்ள நிலையில் இப்படி அசுத்தமாக வைத்துள்ளீர்களே? என்று வேதனையுடன் தெரிவித்த அவர் விரைந்து தூய்மைப்பணிகளை செய்யுமாறுக் கேட்டுக்கொண்டார் .

பின்னர் அரக்கோணம் நகரில் நடந்து கொண்டிருந்த கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து நாகவேடு,கீழ்வீதி,சேந்தமங்கலம்,பல்லூர்,பணப்பாக்கம்,நெமிலி. உள்ளிட்ட பல ஊர்களிலுள்ள அரசுப்ள்ளிகளை ஆய்வு செய்தார் .

Tags

Next Story
ai in future agriculture