அரசுப்பள்ளி ஆசிரியையிடம் 10 சவரன் செயின் பறிப்பு

அரசுப்பள்ளி ஆசிரியையிடம் 10 சவரன் செயின் பறிப்பு
X
அரக்கோணம் அருகே சித்தேரியில் அரசுப்பள்ளி ஆசிரியையை ஸ்கூட்டரிலிருந்து கீழேத் தள்ளி 10 சவரன் செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்

அரக்கோணம் டவுன் ஹால் பகுதி4வது தெருவைச் சேர்ந்த கெஜலஷ்மி,(47) இவர் அன்வர்திகான்பேட்டையில் உள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல பள்ளியிலிருந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் சித்தேரியருகே அவரைப் பைக்கில் பின்தொடர்ந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென முந்தி ஸ்கூட்டரைத் தடுத்து நிறுத்தி கீழே தள்ளினர்.

கீழே விழுந்த ஆசிரியை கஜலஷ்மி சுதாரித்து எழுந்திருப்பதற்குள் கழுத்திலிருந்த தாலிசரடு உள்ளிட்ட10 சவரன் செயின்களை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். அதில் அதிர்ச்சியடைந்த ஆசிரியை கஜலஷ்மி உடனே அரக்கோணம் கிராமியக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிந்தபோலீஸார் செயின்பறிப்பில. ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!