அரக்கோணத்தில் பூட்டை உடைத்து டி வி, ஸ்கூட்டர் திருட்டு

அரக்கோணத்தில் பூட்டை உடைத்து டி வி, ஸ்கூட்டர் திருட்டு
X

கம்பத்தில் நகை கொள்ளை

அரக்கோணம் ஜவஹர்நகரில் பூட்டை உடைத்து வீட்டிலிருந்து டிவி, ஸ்கூட்டரை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார்தேடி வருகின்றனர்.

அரக்கோணம், ஜவஹர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்(40), சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவர் குடும்பத்தினருடன் அதிகாலை சோளிங்கர் கோவிலுக்கு சென்றார். அப்போது வீட்டின் கேட் மற்றும் கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருந்தது. அக்கம்பக்கத்தினர் உடனே ராஜேஷுக்கு தகவல் தெரிவித்தனர். .

ராஜாஷ் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது வீட்டிலிருந்து ₹50000 மதிப்பு உள்ள டிவி, ₹70000 மதிப்புலான ஸ்கூட்டர் ,மற்றும் பீரோவில் வைத்திருந்த ரொக்கம் ₹2000 மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளதை அறிந்தார் .

இதுகுறித்து ராஜேஷ் அரக்கோணம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!