வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
X

செல்போன் திருட்டு (கார்ட்டூன் படம் )

அரக்கோணம் அடுத்த வேடலில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரக்கோணம் அடுத்த வேடலில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வேடல் பெரியார் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி (47). சென்னையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்புறம் உள்ள கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 11 சவரன் நகை மற்றும் ரூபாய் ஏழாயிரம் கொள்ளையடித்து சென்றிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, தனலட்சுமி அரக்கோணம் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், அங்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்து, தடயங்ஙளை சேகரித்து சென்றனர். இதனையடுத்து போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!