தக்கோலம் குசஸ்தலை ஆற்றில் அடித்துச்சென்றவர் சடலமாக மீட்பு.

தக்கோலம் குசஸ்தலை ஆற்றில் அடித்துச்சென்றவர் சடலமாக மீட்பு.
X

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே குசஸ்தலை ஆற்றில் அடித்துச்சென்றவரின் சடலத்தை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் தொடர் மழையால் பெருவெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் ஆற்றைக்கடக்கும் பாதைகள் அனைத்தும அடைக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில். தக்கோலத்தைச்சேர்ந்த இராஜேந்திரன் என்பவர், நகிரிகுப்பம் அருகே ஆற்றைக் கடக்க முயன்றதாகவும் அப்போது அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. உடனே தகவலறிந்து வந்த அரக்கோணம் வட்டாட்சியர், அரக்கோணம் தேசியபேரிடர் மீட்புப்படையினருக்கு இது குறித்து தெரிவித்தார்.

அதன்பேரில் வந்த மீட்புப் படையினர் ஆற்றில் இறங்கி இராஜேந்திரனை தேடுதல் பணியில்ஈடுபட்டனர். மீட்புப்படையினரின் நீண்ட தேடுதலுக்குப் பிறகு இராஜேந்திரன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்