ஏடிஎம்ஐஉடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

ஏடிஎம்ஐஉடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
X

கொள்ளையிடப்பட்ட வங்கி ஏடிஎம்

அரக்கோணம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ் சாலையில் ஏடிஎம்ஐ உடைத்து பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் கிராமத்தில் தனியார் கல்லூரி உள்ளது. அதன் எதிரே ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் மையம்செயல்பட்டு வருகிறது. அந்த இயந்திரத்தில் கடந்த 15ந்தேதி வங்கியின் மூலம் ₹8லட்சத்து 50ஆயிரத்தை நிரப்பியுள்ளனர்.

இந்நிலையில், இரவு மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து வெல்டிங் மிஷன் மூலமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த ரூ. 3 லட்சத்து 91 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து தகவலறித்த அரக்கோணம் தாலூக்கா போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது, ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பழுதடைந்த நிலையில் பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் இருந்ததையறித்த போலீஸார் சம்பந்தபட்ட வங்கி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இருப்பினும், வங்கி அதிகாரிகள், தகவல் தெரிவித்தும் பல மணி நேரமாக வராமல் இருந்ததால் காத்திருந்தனர்.

பின்னர் அங்கு வந்த அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையில் ஆய்வாளர் சேதுபதி மற்றும் போலீஸார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!