அரக்கோணம் சப் கலெக்டர் தலைமையில் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது

அரக்கோணம் சப் கலெக்டர் தலைமையில்  வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
X

அரக்கோணம் சப் கலெக்டர் தலைமையில் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது

அரக்கோணம் நகராட்சி சப்கலெக்டர் சிவதாஸ் தலைமையில் மளிகை,காய்கறி மற்றும் பழ வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதை தவிர்க்க மளிகை, காய்கறிகள் மற்றும் பழ வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் வட்டாட்சியர் பழனிராஜன், காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் நகராட்சி ஆணையர் ஆசீர்வாதம் ஆகியோர் அரக்கோணம் பகுதி வியாபாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

ஆலோசனை கூட்டத்தில் அரக்கோணத்தில் உள்ள 36 வார்டுகளிலும் பழம், காய்கறிகளை வண்டிகள் மூலம் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மளிகை பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்வதற்கு அதற்கான அடையாள அட்டை நகராட்சி அலுவலர் மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்த அதிகாரிகள், வியாபாரிகள் அவற்றை பெற்று அரசு அனுமதி வழங்கியுள்ள நேரங்களில் வியாபாரம் செய்யவேண்டும் என்று தெரிவித்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!