அரக்கோணம் பள்ளி மாணவர் மாநில சதுரங்க சாம்பியன்

அரக்கோணம் பள்ளி மாணவர் மாநில சதுரங்க சாம்பியன்
X

மாநில அளவில் நடந்த செஸ் சாம்பியன் போட்டியில் அரக்கோணத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் தர்ஷன் மாநில சாம்பியன் பட்டத்தை வென்றார்.

மாநில அளவில் நடந்த செஸ் சாம்பியன் போட்டியில் அரக்கோணத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் மாநில சாம்பியன் பட்டத்தை வென்றார்.

2021-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சதுரங்க விளையாட்டிற்கான மாநில சாம்பியன்ஷிப் தேர்வு செய்யும் சதுரங்கப்போட்டி, மாநில சதுரங்கக் கழகம் சார்பில் இணைய வழி மூலமாக 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கானப் பிரிவில் இம்மாதம்10,11 ஆகிய தேதிகளில் சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது.

அதில் இராணிப்பேட்டை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் அரக்கோணம் தாலுக்காவை சேர்ந்த தர்ஷன் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றிபெற்று சிறுவன் தர்ஷன் சாம்பியன் பட்டத்தை பெற்றார் . போட்டியில் மாநிலத்தின் பலமாவட்டங்களில் இருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர் .

போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனான தர்ஷனை மாவட்ட செஸ் கழக கௌரவத் தலைவர் டாக்டர் பன்னீர் செல்வம், உள்பட ஏராளமானோர் பாராட்டினர் .மேலும் சிறுவன் தர்ஷன் இம் மாத இறுதியில் நடக்க உள்ள தேசிய அளவிலான இணைய வழி சதுரங்க போட்டியில் தமிழகத்தின் சார்பில் போட்டியிட உள்ளார் குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்