அமமுக வேட்பாளர் நெசவு செய்து பிரச்சாரம்

அமமுக வேட்பாளர் நெசவு செய்து பிரச்சாரம்
X
அரக்கோணம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பெண்களின் காலில் விழுந்தும், தறி நெசவு செய்தும் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்

அரக்கோணம் அடுத்த வளர்புரம் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட கூடிய வேட்பாளர் மணிவண்ணன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது கோவிலுக்கு வெளியில் இருந்த பெண்களிடம் தனக்கு வாக்களிக்குமாறு காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். நான் வெற்றி பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற வாக்குறுதி அளித்தார். பின்னர் நெசவாளர் பகுதிக்கு சென்று அவர்கள் வீட்டுக்கு நேரில் சென்று நெசவு செய்தபடியே குக்கர் சின்னத்திற்கு தனது வாக்கை சேகரித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!