கோட்டாட்சியரை கண்டித்து விஏஓ.,கள் போராட்டம்

கோட்டாட்சியரை கண்டித்து விஏஓ.,கள் போராட்டம்
X

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முறைகேடாக தங்களை பணியிட மாறுதல் செய்த கோட்டாட்சியரை கண்டித்து விஏஓ.,கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களுக்கு உட்பட்ட பணியிடமாறுதலை கோட்டாட்சியர் பேபி இந்திரா என்பவர் முறைகேடாக செய்ததாக அவரை கண்டித்து அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களை சேர்ந்த விஏஓ.,கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நெமிலி வட்டத்தில் இருந்து கருதிறுமன் என்பவரை அகவளம் கிராமத்திற்கும், செந்தில்நாதன் என்பவரை ரெட்டிவளம் கிராமத்தில் இருந்து அரக்கோணம் வட்டம் அம்மனூர் கிராமத்திற்கும், குமரவேல் என்பவரை பெருமூச்சு கிராமத்தில் இருந்து மாற்றம் செய்து முறைகேடாக பணிமாறுதல் செய்ததாக அரக்கோணம் கோட்டாட்சியர் பேபி இந்திரா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் குமரவேல் ஆகியோரை கண்டித்து இரண்டு வட்டங்களை சேர்ந்த விஏஓ.,கள் அரக்கோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி