ஆழ்துளை கிணற்றுக்கு மானியம் வழங்க தாமதம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த முல்வாய் கிராமத்தில் கடந்த 2018 ஆண்டு வேளாண்துறை சார்பில், ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்குவதாக அறிவித்திருந்தனர். இதற்கு இந்த கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் கடன்பெற்று 2018 ஆம் ஆண்டு ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து உள்ளனர்.
மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு முறை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும், அரக்கோணம் ஒருங்கிணைந்த வேளாண்மை துறை சார்பில் இதுவரை விவசாயிகளுக்கு மானியம் கிடைக்க வில்லை. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று அரக்கோணம் வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளை கண்டித்து அலுவலகம் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக வேளாண்மை முதன்மை அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு தான் புதிதாக பொறுப்பேற்று உள்ளதாகவும், விவசாயிகள் இதற்கு முன்பு பதிவு செய்தது முறையாக ஆன்லைன் பதிவு செய்யவில்லை எனவும் தற்போது அவர்களுடைய புகாரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்தால்10 நாட்களில் அவர்களுக்கு மானியம் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu